பிரபலங்களின் போட்டோக்களுக்கு ஒரு லைக் போட்டால் இத்தனை ஆயிரமா? மக்களே உஷார்
சமீப காலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் தற்போது பாலிவுட் பிரபலங்களின் இன்ஸ்டாவினை லைக் செய்யும் பகுதி நேர வேலை என்று கூறி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
அதிகரிக்கும் மோசடி
இந்தியாவில் ஆன்லைன் மோசடி தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்திய வழக்கில், பாலிவுட் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் இடுகைகளை லைக் செய்யும் பகுதி நேர வேலை என கூறிய நான்கு பேரிடம் 32 வயது நபர் ரூ.37 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த புதிய மோசடி என்ன என்பதையும், மோசடி செய்பவர்கள் உங்களை எவ்வாறு என்பதையும் தெரிந்து கொள்வோம்.
ஸ்கேமர் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் மூலம் பிரித்தெடுத்து உங்களது விண்ணப்பத்தை பெறும் மோசடி கும்பல் உங்களது தொடர்பு எண் மற்றும் தகவல்கள் இவற்றினை தெரிந்து கொள்கின்றனராம்.
புதிய மோசடி இன்ஸ்டாகிராமில் பிரபலங்களில் இடுகைகளை விரும்புவதற்கு மோசடி செய்பவர் ரூ.70 வழங்குகிறார். இதன் மூலம் 2 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என உறுதியளித்து, சில செயல்கள் மூலம் நம்பிக்கை வரவழைத்து இந்த வேலையை செய்து வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் எனவும் பல மோசடிகளில் சிக்கிய பணத்தை இழந்து வருகின்றனர். ஆரம்பத்தில் நம்பிக்கை அளிக்கும்விதமாக செயல்பாடுகள் இருப்பதால் ஆயிரக்கணக்கில் போட்டு லாபம் எடுத்த வாடிக்கையாளர்கள் பின்பு லட்சக்கணக்கில் போடும் போது ஏமாற்றத்தை அடைகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |