வௌவால்களில் இருந்து புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் உலக நாடுகள்
கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கிறது.
சீனாவின் வூஹான் மாகாண சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என கூறப்பட்டாலும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.
எனினும் இதனை ஒப்புக்கொள்ள சீனா மறுத்துள்ள நிலையில், அமெரிக்கா- சீனா இடையே மோதல் முற்றியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்று சீனாவில் சிலவகை வெளவால் இனத்தில் புது வகையான வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் ரினோலோபஸ் பசில்லஸ் எனப்படும் வைரஸ் தற்போது பரவி வருவதாகவும் கூறப்படுகிறது
கொரோனா வைரசுக்கு இணையாக இந்த வைரஸ் இருப்பதால், மனிதர்களுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே குறித்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாமல் இருக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.