கோபியின் மனைவி ராதிகாவா இது? மாடர்னாக உடையில் கலக்கல் புகைப்படங்கள்
பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா சேலையிலிருந்து மார்டன் உடைக்கு மாறி, கோபிக்கும் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மக்களின் மனதைக் கொள்ளையடிக்கும் பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த சீரியலில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முக்கிய கதாபாத்திரங்களாக மக்கள் மத்தியில் தனகென ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இந்த சீரியலில் புதிய திருப்பு முனையாக கோபிக்கும், ராதிகாக்கும் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து கோபி ராதிகாவிடம் பல்பூ வாங்கி வருகிறார்.
மார்டனாக மாறி ஷாக் கொடுக்கும் ராதிகா
இந்நிலையில் ராதிகா வேடத்தில் நடிக்கும் நடிகை “ரேஷ்மா பசுபுலேட்டி” தற்போது மார்டன் உடைகளில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது இவரை மார்டன் உடையில் பார்க்கும் ரசிகர்கள் கோபி நீங்கள் மார்டன் உடை அணிந்தால் ஒன்றும் கூறமாட்டாரா? என கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.