வெளிநாட்டில் கணவர்: விடிய விடிய புது மனைவியை ஆடையில்லாமல் நிற்க வைத்து தொல்லை! பெண் எடுத்த அதிரடி முடிவு
புது மனைவியை வீடியோ கால் மூலம் வன்கொடுமை தொல்லை கொடுத்த கணவரை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் கோட்டா பகுதியில் வசிக்கும் 30 வயதான பெண்ணொருவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான நாளிலிருந்து தினமும் குடித்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதுடன், அவரது தாயும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். பின்பு சில மாதங்களுக்கு பின்பு கணவர் கனடாவுக்குச் சென்றுள்ளார்.
கனடாவிலிருந்து வீடியோ கால் மூலம் அவரின் புது மனைவியுடன் பேசிய நிலையில், தினமும் இரவு முழுவதும் ஆடையில்லாமல் நிற்க கூறி வன்கொடுமை தொல்லை கொடுத்துள்ளார்.
சில நாட்களில் இதற்கு மனைவி மறுத்ததால், தனது தாயை விட்டு அடித்து கொடுமைப்படுத்த கூறியதால், அவரும் மருமகளை அடித்து கொடுமைப்படுத்தியதுடன், அவரிடமிருந்த போனையும் பறித்து வைத்துள்ளார்.
குறித்த பெண் தன்னையும் கனடாவிற்கு அழைத்துச் சென்ற கேட்ட போது, திருமண உறவினை முறித்துக்கொள்ளப் போவதாக கணவர் கூறியுள்ளார்.
பின்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற அப்பெண், தனது கணவர் மற்றும் மாமியார் செய்யும் கொடுமைகளை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.