விஞ்ஞானிகளின் பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு: இங்கே மனிதர்கள் வாழலாமா?
ஆராய்ச்சியாளர்களால் பூமியை விட இருமடங்கு பெரிய அடர்த்தியான வளிமண்டலத்துடன் கூடிய ஒரு புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய கிரகம்
பூமி அனைத்து உணிரினங்கள் வாழ்வதற்கும் உகந்த ஒரு கோளாகும். இங்கே உயிரினங்கள் வாழ்வதற்கு அனைத்து தேவையான விஷயங்களும் உள்ளது.
இந்த நிலையில் உயிரினங்கள் வாழ தகுந்த இன்னுமொரு கோளை விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்திற்கு அருகில் கண்டுபிடித்துள்ளனர்.
இது அடர்ந்த வளிமண்டலத்துடன் இருக்கும் நமது பூமியை விட 8 மடங்கு எடை கொண்டதோடு, இரு மடங்கு பெரியது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு சூப்பர் எர்த் என்றும் 55 கேன்கிரி இ என்றும் விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.இது ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு அருகில் மிகவும் ஆபத்தான முறையில் சுற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
நமது பூமி ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது கண்டுபிடித்துள்ள சூப்பர் எர்த் வெறும் 18 மணி நேரத்தில் தனது சுற்றுவட்டப்பாதையை நிறைவு செய்வதாகவும் கூறுகின்றனர்.
இதன் வளிமண்டலம் கார்பன் டை ஆக்ஸைடு அல்லது கார்பன் மோனாக்சைடு நிறைந்ததாக இருக்கலாம் என்றும், நீராவி மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு போன்ற பிற வாயுக்களை கொண்டிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |