வெடிக்காத புது வகை composite சிலிண்டர் - இதன் சிறப்பு அம்சம் என்னென்ன தெரியுமா?
வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர்கள் அதிகமாக வெடிப்பதால், பல பெண்கள் அச்சம் கொள்வார்கள். வெப்பம் அதிகமாகும்போது இந்த சிலிண்டர்கள் வெடிக்கும் தன்மை கொண்டவை.
இந்த சிக்கல்களை சரிசெய்ய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதுதான் Composite வகை சிலின்டர்கள்.
அதில், இந்தியாவில் 10 கிலோ மற்றும் 5 கிலோ composite சிலிண்டர்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. பல லேயர்களால் ஆன இந்த சிலிண்டர்கள் இலகுவானவை, துரு பிடிக்காதவை, குறைந்த எடை கொண்டவை, பார்ப்பதற்கு அழகானவை அவற்றையெல்லாம் விட எளிதில் வெடித்துவிடாத பாதுகாப்பானவை.
சிறப்பு அம்சமாக இந்த வகை சிலிண்டர்களில் எவ்வளவு எரிவாயு மிச்சம் உள்ளது என்பதை பார்க்க முடியும். தொடர்ந்து, நீங்கள் தற்போது எரிவாயு சிலிண்டர் வாங்கும் டீலர்களிடம் பேசி இந்த சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான டெபாசிட் தொகை ஸ்டீல் சிலிண்டர்களை விட சிறிது அதிகம். அந்த கூடுதல் தொகையை மட்டும் செலுத்திவிட்டு இந்த சிலிண்டர்களுக்கு மாறிவிடலாம்.
பல கூடுதல் நன்மைகள் இந்த சிலிண்டர் வகையில் இருப்பதால் சிறிதளவிலான கூடுதல் டெபாசிட் ஒரு சுமையாக இருக்காது.