வர்றவன் குணசேகரன் இல்லைம்மா... சீரியலில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்குள் வந்த நிலையில், வீட்டில் அனைவரும் நடுங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
புதிய குணசேகரன் வேல ராமமூர்த்தி
தற்போது புதிய குணசேகரனாக வேல ராமமூர்த்தி வந்துள்ள நிலையில், சீரியலின் இனி வரும் கதை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வர்றவன் குணசேரகன் இல்லை அம்மா... சுடலை உக்கிரமா வந்திட்டு இருக்கான் என்று கூறியுள்ள நிலையில், வீட்டிற்கு வந்துள்ள சம்மந்த காரர்களை விருந்து சாப்பிட்டு போகுமாறு குணசேகரன் தனது தோரணையில் கூறியுள்ளார்.