காரில் தண்ணீர் போத்தலை வைத்து செல்பவரா நீங்கள்? ஆபத்தான இந்த தவறை இனி செய்யாதீங்க
பொதுவாக கார் வைத்திருப்பவர்கள் தண்ணீர் போத்தலை வைத்திருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு தண்ணீர் போத்தலை வைத்தால் எளிதில் தீப்பிடிக்குமா? காருக்குள் தண்ணீர் போத்தலை வைக்கலாமா? என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தீப்பிடிக்கும் என்று கூறுவதற்கு உண்மையான காரணம், பொதுவாக ஜன்னல் கண்ணாடிகள் வழியாக காருக்கு உள்ளே சூரிய ஒளி அதிகளவில் ஊடுருவும்.
அப்போது தண்ணீர் போத்தல் வழியாகவும் சூரிய ஒளி ஊடுருவி செல்லும். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில் அதிக அளவு சூடாகி விடுவது மட்டுமின்றி, வெளியே இருக்கும் வெப்பநிலையை விட காரில் உள்ளே அதிக வெப்பம் இருப்பதை அவதானிக்க முடியும்.
இவ்வாறு தண்ணீரு் போத்தலில் எந்த இடத்தில் சூர்ய கதிர்கள் அதிகமாக ஊடுருவுகின்றதோ, அந்த இடத்தில் தீப்பற்றும் அளவிற்கு வெப்பம் ஏற்படும். இதனாலே தண்ணீர் போத்தலால் தீப்பற்றி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அதிகப்படியான வெப்பம் காரணமாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீருக்குள் வெளியிடும் பிபிஏ எனப்படும் பிஸ்பெனால் ஏ (Bisphenol A - BPA) போன்ற அபாயகரமான ரசாயனங்களின் அளவு அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து.
எனவே தண்ணீர் போத்தல் அதிக வெப்பத்தில் இருக்கும்போது தீ பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
எனவே காருக்கு உள்ளே தண்ணீர் போத்தலை வைத்துச் செல்லும் போது, நாம் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் போத்தலை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது தண்ணீர் பொத்தலை இருக்கைக்கு அடியில் போட்டு வைக்கலாம்.
இதன் மூலம் சூரிய வெளிச்சம் விழுவதற்கான வாய்ப்புகள் குறையும். அத்துடன் தீ பற்றுவதற்கான வாய்ப்புகளும் குறைந்து விடும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக ஆபத்துக்களை குறைத்து கொண்டு, மகிழ்ச்சியான கார் பயணத்தை மேற்கொள்ளலாம்.