இந்த விஷயங்களில் தலையிடுவது பெரிய அவமானத்தை ஏற்படுத்துமாம்.. இனி செய்யாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றின்படி, ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில விஷயங்களில் தலையிடக்கூடாது.
அந்த வகையில், என்ன மாதிரியான விடயங்களில் நாம் மறந்தும் தலையிடக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மறந்தும் தலையிடக் கூடாத விஷயங்கள்
1. இரண்டு புத்திசாலிகள் பேசிக் கொண்டிருக்கும் போது எந்தவித காரணங்களுமின்றி இடையில் தலையிடக் கூடாது. அவ்வாறு செய்வது அவர்களின் பணிக்கு இடையூறை ஏற்படுத்தும். அதையும் தாண்டி அது பெரிய முட்டாள்த்தனம் என சாணக்கியர் கூறுகிறார்.
புத்திசாலி ஒருவன் எந்த சந்தர்ப்பத்திலும் இப்படியான செயல்களில் ஈடுபட மாட்டன். நீங்கள் இப்படி நடந்து கொண்டால் உங்களின் மரியாதை குறைந்து விடும்.
2. கணவன் மனைவி இடையிலான பிரச்சினைக்கு ஒருபோதும் தலையிடக் கூடாது. இவர்களின் சண்டை இரு சக்கரங்கள் போன்றது என சாணக்கியர் கூறுகிறார். அதில் மூன்றாவது நபர் தலையிடக் கூடாது.
மேலும், அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடவும் கூடாது. இது அவர்களின் தனியுரிமையின் மீதான அத்துமீறல் என சாணக்கியர் கூறுகிறார்.
3. கலப்பை- எருது இவை இரண்டு ஒன்றாக செல்லும் போது அதற்குள் நாம் செல்லக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். இப்படி இடையில் செல்வதால் நீங்கள் காயப்படலாம்.
4. புரோகிதர் ஒருவர் வழிபாடு செய்யும் போது இடையில் செல்லக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். நெருப்பு குழிக்கு அருகில் அமர்ந்து பூஜை செய்யும் போது இடையில் சென்றால் அது பாவச் செயலாக பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இது போன்ற செயல் மரணம் அல்லது அந்தளவிற்கான சேதத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |