காலாக மாறிய கம்பு: சைக்கிளில் பறக்கும் இளைஞரின் விடாமுயற்சி
இளைஞர் ஒருவர் ஒரு கால் இல்லாத நிலையில் கம்பு ஒன்றினை காலாக மாற்றி சைக்கிளில் பயணிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது சைக்கிளின் பின் சிலிண்டரை வைத்துக் கொண்டு சைக்கிளை ஒரு கையை பிடித்துக் கொண்டு ஓட்டுகிறார்.
அவருக்கு ஒரு கால் மட்டுமே உள்ளது. மற்றொரு காலில் பெடலை மிதிப்பதற்கு பதிலாக ஒரு கம்பினை வைத்துக் கொண்டு பெடலை அழுத்தி சைக்கிளை ஓட்டுகின்றார்.
இந்த காணொளி ட்விட்டரில் வைரலாகி வருகின்றது. இளைஞரின் செயலை கண்டு பலரும் வாழ்த்துக்களையும், அவரது தன்னம்பிக்கை குறித்து மரியாதையையும் கமெண்ட்ஸ் மூலமாக பதிவிட்டு வருகின்றனர்.
“Never give up, for that is just the place and time that the tide will turn.”
— Erik Solheim (@ErikSolheim) December 10, 2021
This is @thebetterindia ??
VC: @AwanishSharan
pic.twitter.com/dmDvwoIfEh