Baakiyalakshmi: முடியும் சீரியல்... பாக்கியாவின் கடைசி பேச்சு!... கொண்டாடும் பெண்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியுடன் சேர்ந்து வாழாமல் சொந்த காலில் நிற்பதாக எடுத்துள்ள முடிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியது.
இன்று இந்த சீரியலில் கடைசி நாள் ஆகும். ஈஸ்வரி கோபி பாக்கியா இருவரையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் பாக்கியா இதற்கு சம்மதிக்காமல் சொந்த காலில் நிற்பதாக கூறி தனிமையில் வாழ்வதாக கதையை முடிக்கின்றனர்.
வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக இருந்த செல்வி தனது மகனை கலெக்டருக்கு படிக்க வைத்து கடைசியாக இனியாவை திருமணம் செய்து வைத்துள்ளது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பாக்கியா அனைத்து பெண்களுக்கு தன்னம்பிக்கையை மிகவும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை கேட்ட பெண்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு கொண்டாடிவருகின்றனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
