பரிசு கொடுத்தால் உறவு பாதிக்குமா? இந்த பொருட்களை தவறியும் பரிசாக கொடுத்துடாதீங்க...
பொதுவாகவே நமக்கு நெருங்கியவர்களுக்கு நமது அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசளிப்பது வழக்கம்.பிறந்தநாள் முதல் திருமணம் வரை எந்த ஒரு சிறிய நிகழ்ச்சிக்கும் பரிசு கொடுப்பது தொன்று தொட்டு புழக்கத்தில் உள்ள நடைமுறைதான்.
ஆனால் வாஸ்து மற்றும் ஜோதிடத்தின் படி, சில வகையான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் பரிசாக கொடுக்கக்கூடாதாம். அந்தவகையில் பரிசாக கொடுக்க கூடாத பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பரிசாக வழங்கக்கூடாத பொருட்கள்
மீன்களை ஒருபோதும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு பரிசாக வழங்கக்கூடாது என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
மீன்வளத்தை பரிசளிப்பதன் மூலம், உங்கள் கர்மாவையும் செழிப்பையும் அவர்களுக்கு அனுப்புகிறீர்கள் என்று அர்த்தம். இதனால் பரிசு கொடுத்தவருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கூர்மையான பொருட்களை யாருக்கும் பரிசாக வழங்கக்கூடாது. இப்படிப்பட்ட பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் கடத்தப்படும். கத்திகள் மற்றும் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்கள் துரதிர்ஷ்டத்தைத் தருகின்றன.
கைக்கடிகாரங்களை பரிசாக கொடுப்பது நல்லதல்ல என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். குறிப்பாக சுவர் கடிகாரங்களை பரிசாக கொடுக்கவே கூடாது.
இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, பரிசு கொடுத்தவர்களுக்கும், பெற்றவர்களுக்கும் சண்டை வர வாய்ப்பு உள்ளது. பரிசு வழங்கும் போது இந்த விடயங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |