காலையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்களா? இனி தவறை செய்யாதீங்க
காலை என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான நேரமாகும். அதிலும் காலை உணவை சரியான வகையில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றைய தினம் முழுவதும் ஆரோக்கியமாக தம்முடைய வேலைகளை செய்ய முடியும்.
உதாரணமாக, ஊட்டச்சத்து இல்லாத மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரையுடன் கூடிய விரைவான உணவை உண்பது உங்கள் ஆற்றல் அளவைக் குறைப்பதுடன் நாள் முழுவதும் மந்தமான நிலையிலேயே உங்களை வைத்திருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் அல்லது ஒரு சிலருக்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
ஆதலால் காலையில் சரியான அளவு புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் கொண்ட சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலை உணவில் தவிர்க்க வேண்டியவை:
காலையில் முதல் வேலையாக காபி குடிப்பது கார்டிசோலின் அளை அதிகரிக்கும். மேலும் ஹார்மோன் சமநிலையை எதிர்மறையாக பாதிப்பதுடன், இரத்த அழுத்தம் மற்றும் பிற சிக்கல்களை அதிகரிக்கும்.
இதே போன்று பழச்சாறு எடுத்துக்கொள்ளவது தவறாகும். ஏனெனில் நார்ச்சத்து இல்லாத பழச்சாரை நீங்கள் உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீரிழிவு மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ளவர்கள் பழச்சாறுக்கு பதிலாக பழத்தை சாப்பிடலாம்.
தானியங்கள் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், உண்மையில் மிகவும் பதப்படுத்தப்பட்டவை மற்றும் மிகக் குறைந்த முழு தானியங்களை கொண்டதால், அதிக சர்க்கரை உள்ளடக்கியுள்ளதுடன், போதுமான நார்ச்சத்து இல்லாததால், காலையில் இதனை தவிர்க்கவும்.
கேக், அப்பம், வாஃபிள்கள் இவ்வாறான சுலபமான உணவுகளை எடுத்துகொள்ள அதிகமானோர் விரும்புகின்றனர். ஆனால் இவை குறைந்த ஆற்றலையும், குறைந்த உட்பத்தி திறனையும் அளிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
தேநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது தீங்கு விளைவிக்கும். காலையில் அதிக அளவு சர்க்கரை, காஃபின் மற்றும் நிகோடின் ஆகியவை அமிலத்தன்மை, வயிற்றில் எரியும் மற்றும் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |