மறந்தும் இரவு நேரம் இத செய்யாதீங்க.. கெட்டது வந்து சேரும்
இந்து புராணங்கள் படி, இரவு மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில விடயங்களை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகின்றது.
இப்படி தவிர்ப்பதால் லக்ஷ்மி தேவியின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சில வேலைக்கும் சில விதிகள் உள்ளதும் அவற்றை சரியாக பின்பற்றாவிட்டால் நிறைய இழப்புக்கள் ஏற்படலாம்.
அந்த வகையில், இரவு நேரத்தில் செய்யக்கூடாத சில விஷயங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இரவு வேளைகளில் மறந்தும் இவற்றை செய்யாதீர்கள்
1. வாஸ்துபடி, இரவு நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் வீட்டிலுள்ள மகாலட்சுமி வெளியேறி விடுவார். இதனால் வீட்டில் வறுமை நீடிக்கலாம்.
2. இரவு படுக்கைக்கு செல்லும் போது பெண்கள் தலையை விரித்து போட்டுக் கொண்டு தூங்கக் கூடாது. இப்படி தூங்கினால் வீட்டிலுள்ள எதிர்மறையான சக்திகள் உங்களை நாடி வரலாம். கணவனின் தூக்கத்தையும் அது கெடுக்கும்.
3. இரவு நேரத்தில் சமையல் அறையில் அழுக்கான பாத்திரங்களில் அப்படியே வைத்து விட்டு தூங்கக் கூடாது. இப்படி செய்து வந்தால் லட்சுமியின் அருள் உங்களுக்கு இருக்காது. சில சமயங்களில் இதனால் எதிர்மறையான சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வீட்டில் அமைதியின்மை ஏற்படும்.
4. சில வீடுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அல்லது இரவு வேளைகளில் தான் வீட்டை சுத்தம் செய்வார்கள். இது லட்சுமியின் அருளை கிடைக்க விடாமல் தடுக்கும். அதே சமயம் தெற்கு திசையில் துடைப்பத்தை வைத்து விட்டு தூங்கினால், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
5. தலை முடியை வெட்டுதல் அல்லது சீவுதல் போன்ற வேலைகளை இரவு வேளைகளில் வைத்து கொள்ளக் கூடாது. அதிலும் குறிப்பாக பெண்கள் இப்படி செய்யும் போது எதிர்மறையான ஆற்றல்கள் உங்களை நாடி வரலாம்.
6. இரவு நேரத்தில் பால், சர்க்கரை அல்லது உப்பு போன்றவற்றை தானம் செய்வது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |