இந்த 5 பொருட்களை மட்டும் ஒருபோதும் கடனாக வாங்காதீங்க... எச்சரிக்கும் சாஸ்திரங்கள்!
நமது முன்னோர்கள் சாஸ்திரங்களையும் சம்பிரதாய முறைகளையும் சரியாக கடைப்பிடித்தன் காரணமாகவே நீண்ட ஆயுளுடனும் செல்வ செழிப்புடனும் வாழ்ந்தார்கள்.
இந்துமத சாஸ்திரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பொருட்களை கடன் வாங்கி பயன்டுத்துவதால் பல்வேறு வகையிலும் பாதக விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
மீறி இரவல் வாங்கி உபயோகிப்பதால் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்துக்கு உட்படுவதுடன் ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படும் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றது. அப்படி கடன் வாங்கி பயன்படுத்த கூடாத பொருட்கள் எவை என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆடைகள்
சாஸ்திரங்களின் பிரகாரம் மற்றவர்கள் பயன்படுத்திய உடைகளை நாம் கடன் வாங்கி பயன்படுத்துவதால், இவர்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீய சக்திகள் நம்மை தாக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும், அந்த உடைகளில் இருக்கும் இறந்த செல்கள், நுண்ணுயிர்கள் போன்றவற்றால், நமக்கு ஒவ்வாமை மற்றும் நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தங்க ஆபரணங்கள்
தங்க ஆபரணங்கள் லட்சுமி தேவியின் அம்சமாகக் பார்க்கப்படுகின்றது. ஆனால் அதனை இரவல் வாங்கி அணியும்போது நிதி தொடர்பான பாரிய சிக்கல்களையும் துரதிஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். மேலும் இதன் விளைவாகவும் நோய்கள் கடத்தபட வாய்ப்பு காணப்படுகின்றது.
கைகடிகாரம்
பெரும்பாலும் சில ஆண்களிடம் நண்பர்களின் கைகடிகாரத்தை அணியும் பழக்கம் காணப்படுகின்றது ஆனால் சாஸ்திரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்யவே கூடாது என குறிப்பிடப்படுகின்றது.
கைகடிகாரத்தை கடன் வாங்கிப் பயன்படுத்தினால் பொருளாதார ரீதியாக பாரிய சிக்கல்கள் கஷ்டங்கள் ஏற்படுவதுடன் கெட்ட நேரம் ஆரம்பமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
பேனா
சாஸ்திரங்களில் குறிப்பிடப்படும் வகையில் முக்கிய தருணங்களில் யாரிடமும் பேனாவை கடன் வாங்கி பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக பத்திரங்களில் கையெழுத்திடும் நேரங்களில் பேனாவை கடன் வாங்கி பயன்படுத்துவது, நம்முடைய வாழ்க்கையை மாற்றப்போகிற தருணம் நமக்கு முன்னேற்றத்தை கொடுக்காது என குறிப்பிடப்படுகின்றது.
காலணிகள்
சில சமயங்களில் அவசர நேரங்களில் மற்றவர்களின் செருப்பை போட்டுக்கொண்டு வெளியில் செல்வதை நாம் பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது. ஆனால் இது துரதிஷ்டத்தை ஏற்படுத்துமாம். காலணி என்பது சனீஸ்வரனின் அம்சமாக பார்க்கப்படுகின்றர்.அதை கடன் வாங்கி பயன்படுத்தும்போது சனீஸ்வரரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |