வைட்டமின் பி சத்து குறைபாடா? Neurobion Forte மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வைட்டமின் பி சத்து குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க Neurobion Forte மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 போன்ற குறைபாடுகளுக்கு மருந்தாகிறது Neurobion Forte.
சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சேதமடைந்த நரம்புகளை மீட்டெடுக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன் கார்போஹைட்ரேட், புரோட்டீன், அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.
வைட்டமின் பி குறைபாடு இருந்தால் ரத்த சோகை, உடற்சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
Neurobion Forte மாத்திரைகள் வைட்டமின் பி குறைபாட்டை நீக்குவதால் உடலை வலுப்படுத்தும்.
ஒருநாளைக்கு இரண்டு மாத்திரைகள் வீதம் மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
25 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலையில் மாத்திரைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கவும்.
மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை படித்துவிடுங்கள், சரியான அளவுகளில் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ளவும், அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குறிப்பு- எந்தவொரு நோய்க்கும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.