காசு சம்பாதிக்க வேறுவழியே இல்லையா? அனிதா செய்த செயலால் பொங்கிய நெட்டிசன்கள்
செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் மாலைதீவிற்கு சுற்றுலா சென்ற போது தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட வீடியோ காட்சி ஒன்றினால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.
அனிதா சம்பத்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல திரைப்பட வாய்ப்புக்களை பெற்றவர் தான் அனிதா சம்பத். இது மட்டுமல்லாமல் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது.
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கிடைத்த ரோல்களில் நடித்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் அனிதா.
பின்னர் தன்னுடன் வேலை செய்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நட்சத்திர ஜோடிகளாக இருப்பது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து முன்னேறி வருகின்றனர்.
இவர் திரையுலகில் பிஸியாக இருந்தாலும் தனக்கு சொந்தமாக யூடிப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அனிதா சம்பத் தற்போது அவரது கணவருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.
அவர் சொந்தமாக யூடிப் சேனல் நடத்திவரும் நிலையில் அதில் சுற்றுலா சென்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இது எதிர்பாராத வகையில் பெரும் சர்ச்சையாகிவிட்டது.
காரணம் இந்தியாவும் மாலைதீவும் பிரச்சனையில் இருப்பதால் மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா வருவதை வந்து செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இப்படியான நேரத்தில் அனிதா சம்பத் அங்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதற்காக அனிதா சம்பத்திற்கு எதிராக பல நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |