Netflix அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை தானம் செய்பவரா நீங்கள்? புதிய ஆப்பு வைத்த நிறுவனம்
உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் செயலியான Netflix தனது சேவை கட்டணத்தை குறைத்த பின் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Netflix செயலி மூலமாக உலகளவில் பல்வேறு திரைப்படங்கள், தொடர்கள் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு சந்தாதாரர் வருடத்திற்கு அல்லது மாதத்திற்கு என குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால், அதன் வாயிலாக தனது நண்பர்களுக்கும் தனது கடவுச்சொல்லை பகிர்ந்து அவர்களாலும் படம் பார்க்க இயலும் என்ற நிலை இருந்தது.
பயனாளர்களுக்கு ஆப்பு
இதனிடையே, 5 முதல் 6 பேர் வரை உபயோகிக்கும் இதை நாம் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப நிபந்தனைகள் இருக்கும். இப்படி, Netflix செயலி அதிகளவில் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டாலும், அவர்களும் வருமானத்தில் சிக்கல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இதனால், தங்களின் பயனர் யார்? யாருக்கு, அதாவது தனது குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து வேறு யாருக்கெல்லாம் கடவுச்சொல்லை வழங்கியுள்ளார் என்ற விபரங்கள் திரட்டப்பட்டு, இனி வரும் நாட்களில் அவ்வாறு அதிக பயனர் உபயோகம் செய்ய வேண்டும் என்றால் அதற்கேற்ப பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட சோதனை
மேலும், இதற்கான சோதனைகள் முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள சில நகரங்களில் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் பதிவு செய்து வைத்த கணக்கை மற்றொருவர் உபயோகம் செய்யும் போது, அவரின் தனிப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவருக்கென புதிய கணக்கு தொடங்க வழிவகை செய்யப்படும்.
இந்த விபரங்கள் உரிமையுள்ள பயனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் அனுமதி அளித்ததும் தான் மற்றொருவர் பயன்படுத்த முடியும் என்ற நிலைவரக்கூடும்.