கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ-வாக இருக்கும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
உலகத்தின் இணையத்தின் நரம்பாக செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ-வாக இருக்கும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்தார்.
அவரது தந்தை, ரகுநாத பிச்சை, பிரிட்டிஷ் கார்ப்பரேஷன்-ல் மின் பொறியாளராகவும் தாயார் லட்சுமி சுருக்கெழுத்தாளராகவும் ஆவார்கள்.
சுந்தர் பிச்சை இந்திய தொழில் நுட்பக் கழகம் ஐஐடியில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறையில் எம்.எஸ் முடித்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ முடித்தார்.
இவரது முதல் வேலை மெக்கன்சி கம்பெனியில் ஆலோசகராக பணியாற்ற அமைந்தது. இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளரானார்.
இவர் இதன்போது கூகுள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தார். இது இவருக்கு பெரும் வெற்றியாக அமைந்தது. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற நிறுவனங்களை தாண்டி உலகின் நம்பர் 1 தேடல் இடமாக கூகுள் குரோம் மாறியது.
இதன் பின்னர் சுந்தர் பிச்சை உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானார். 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் 273,328 பங்குகள் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.
பின்னர், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அவர் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.
இவரின் கடினமான உழைப்பால் கூகுள் நிறுவனம் மேலும் மேலும் வணிகச் சந்தையில் வேகமாக வளர்ந்தது.
2022 ஆம் ஆண்டு ரூ 1,215 கோடியாக இருந்த சுந்தர் பிச்சையின் தற்போதைய சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 8,342 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் உலகின் பணக்கார பட்டியலில் சுந்தர் பிச்சையும் இடம்பிடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |