அடேங்கப்பா இத்தனை கோடிக்கு அதிபதியா..? வாய்பிளக்க வைக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை தமன்னா
தனது 15வது வயதில் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. 2005ம் ஆண்டு வெளியான 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' தான் தமன்னாவின் முதல் திரைப்படம்.
அதன் பின்னர் தெலுங்கில் 'ஸ்ரீ' என்ற படத்தில் நடித்த தமன்னா, தமிழில் 'கேடி' படம் மூலம் என்ட்ரியானார். தொடர்ந்து தமிழில் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, சிறுத்தை, வீரம் என பல படங்களில் நடித்தார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மட்டுமின்றி, தெலுங்கிலும் தமன்னாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது.
இதனால் தமிழ், தெலுங்கு என இருபக்கமும் பிஸியாக நடித்த தமன்னா, இப்போது பான் இந்தியா ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
17 ஆண்டுகளாக திரையுலகில் பயணிக்கும் தமன்னா, தற்போது ஒரு படத்துக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் ஐட்டம் சாங் என்றால் 50 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
இதுபோக ஏராளமான விளம்பரங்களிலும் நடிக்கும் தமன்னா, மாதம் 1 கோடி வரை சம்பாதிக்கிறாராம். இதுவரை அவரது வருமானத்தின் அடிப்படையில் 120 கோடி ரூபாய்க்கு அதிபதியாக உள்ளார் தமன்னா.
மும்பையில் 20 கோடி மதிப்புள்ள வீடும், ஹைதராபாத், சென்னையில் பல கோடிகளில் பிளாட்டும் வாங்கிப் போட்டுள்ளார். அதேபோல், BMW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இவைகளின் மொத்த மதிப்பு 2.5 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. முக்கியமாக தமன்னா 2 கோடி ரூபாய் மதிப்புடைய வைர மோதிரம் ஒன்று வாங்கியுள்ளாராம்.
நடிகைகளிலேயே தமன்னா வைத்திருக்கும் வைர மோதிரம் தான் ரொம்பவே காஸ்ட்லி என சொல்லப்படுகிறது.
தனது காதலர் விஜய் வர்மாவை விட பல மடங்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார் தமன்னா. அதன்படி விஜய் வர்மாவின் சொத்து மதிப்பு 15 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |