எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா.. பரவியது எப்படி? உலக நாடுகள் அதிர்ச்சி!
எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயன்ற நார்வே நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் இந்தியாவில் இரண்டாவது அலை பல உயிர்களை காவு வாங்கி கொண்டு இருக்கிறது.
இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.
நார்வே நாட்டைச் சேர்ந்த ஏர்லண்ட் நெஸ் என்ற மலையேற்ற வீரர், எவரெஸ்ட் சிகரத்தின் அடியிலுள்ள முகாமில் தங்கி இருந்துள்ளார். இதனிடையே, அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், அவரை சோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
மேலும், அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தரைதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அவரின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏனைய மலையேற்ற குழுவினரை என்ன செய்வது என்று நேபாள அரசு ஆலோசித்து வருகிறது.