அட்டகாசமான சுவையில் நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி? ரெசிபி இதோ
நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் நெல்லிக்காயை வைத்து புதிய ரெசிபி ஒன்றை தயாரிக்கலாம்.
சாதத்தை ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிட்டால் சாதத்தில் விருப்பமின்மையாக இருக்கும், அதனால் கொஞ்சம் புதுமையாக செய்து பார்கலாம்.
அந்த வகையில் நெல்லிக்காயை வைத்து சாதம் செய்வது எப்படி? என்பதை பார்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் - 4
- நல்லெண்ணைய் - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- வறுத்த வேர்க்கடலை - தேவையான அளவு
- பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 ஒரு துண்டு
- இஞ்சி - பொடியாய் நறுக்கியது
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- வடித்த சாதம் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும், எண்ணெய் சூடாகியதும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய்,வேர்க்கடலை தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து துருவிய நெல்லியைச் சேர்த்து நன்கு கலந்து செய்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் மஞ்சள் சேர்த்து, சுவைக்கு உப்பு சேர்க்கவும். அதன் பின் வடிகட்டிய சாதத்தை சேர்த்து நன்றாக வதக்கினால் சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.