நெல்லை ஸ்பெஷல் கல்யாண வத்தக்குழம்பு... ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க
நெல்லை ஸ்பெஷல் கல்யாண வத்தக்குழம்பினை மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
மல்லி விதை - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
அரிசி - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1ஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உலர் சுண்டைக்காய் - கால் கப்
பூண்டு பல் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 1
பெருங்காயம் - 1 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 ஸ்பூன்
வெல்லம் - 50 கிராம்

செய்முறை
முதலில் எடுத்துக்கொண்டு வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றினை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மேலும் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து புளி கரைசல் தயாரித்துக் கொள்ளவும்.
தற்போது வத்தல் குழம்பு பொடி தயார் செய்வதற்கு கடாயினை அடுப்பில் வைத்து, அதில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, மல்லி விதை, அரிசி, வெந்தயம், உளுந்து, மிளகு சேர்த்து பதமாக வறுத்துக் கொள்ளவும்.
பின்பு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது வத்தல் குழும்பு செய்வதற்கு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் பென்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி, பெருங்காயம், புளி கரைசல், உப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கொதித்த பின்பு, இறுதியாக வெல்லத்தை பொடியாக இடித்து குழம்புடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கினால் கல்யாண வீட்டு வத்தக்குழம்பு தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |