“கண்ணாடி போடலனா நீயே தெரியமாட்டா..” ரீல்ஸ் பக்கம் திரும்பிய கோபியின் ஆசை மகள்!
“ கண்ணாடி போடவில்லையென்றால் நீயே தெரியமாட்டா ..” என பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியா - கோபிக்கு ஆசை மகளாக நடித்து வருபவர் தான் மேஹா.
இவர் ஆரம்பகாலங்களில் சீரியல்களில் சில சில வேடங்களில் நடித்து வந்தார். மேஹாவின் தீவிர முயற்சியின் பிரதிபலிப்பு தான் பாக்கியலட்சுமி சீரியல் இனியா.
தன்னுடைய அப்பாவிற்கு சார்பாக எல்லோரிடமும் தைரீயமாக பேசும் ஒரு பிள்ளையாக நடித்து வருகிறார்.
கோபியின் ஆசை மகளின் காட்சி
இந்த நிலையில் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் வீடியோக்காட்சியை பார்க்கும் போது சீரியலில் வரும் குட்டி பொண்ணாக இது என நினைக்க வைக்கின்றது.
அந்த வகையில்,“ கண்ணாடி போட்டால் தான் எனக்கு கண்ணு தெரியும்..” என்ற தொனிப்பொருளுடன் ஒரு வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ சீரியலை விட ரீலில் அழகாக இருக்கிறீர்கள்..." என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.