நேரம் தவறி சாப்பிட்டால் இத்தனை பாதிப்புகளா? இனி இப்படி செய்யாதீங்க
பொதுவாக உணவு என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். அதனை நேரத்திற்கு சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானதாகும்.
நாம் காலை 10 மணிக்குள் உணவு சாப்பிட வேண்டும், மதிய உணவை 2 மணிக்குள்ளும் இரவு உணவை 8 மணிக்குள்ளும் தான் சாப்பிடவேண்டும்.
ஆனால் சிலர் எப்போதும் எதாவது வாயில் மென்னுக்கொண்டே இருப்பார்கள், ஒரு சிலர் பசிக்கும் போது மட்டும் சாப்பிடுவார்கள் அவ்வாறு பசிக்கும் போது சாப்பிடுவது தான் சரியானது. சாப்பிடும் நேரத்திலிருந்து அரை மணி நேரம் முன்னதாக சாப்பிட்டால் கூட பல பிரச்சினைகளை ஏற்படும்.
நேரம் தவறி சாப்பிட்டால்
நேரத்திற்கு சாப்பிடாமல் நேரம் தவறி சாப்பிடுவது கேஸ்ட்ரிக் அசிட்டை சுரக்கும் இது அப்படியே அல்சராக மாறும்.
நேரம் தவறி சாப்பிட்டால் மெட்டப்பாலிசம் பாதிக்கப்பட்டு தேவையில்லாத உடல் சதை வைத்து உடல் எடை அதிகரிக்கும்.
நேரத்திற்கு சாப்பிடாமல் நேரம் தவறி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்.
நேரம் தவறி சாப்பிடுவது உடலில் மந்த நிலை ஏற்படும். ஞாபக மறதியும் ஏற்படும்.
பசிக்கும் போது சாப்பிடாமல் நேரம் தவறி சாப்பிட்டால் நாளடைவில் இரத்த கொதிப்பு ஏற்படும்.
வயிற்றில் புண், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |