மனைவியை படிக்க வைக்கறதுக்கு 18 வருடம் சமையல் செய்றாரு! உண்மையை உடைத்த மகள்
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில், சமையல் செய்யும் அப்பாக்கள் vs பிள்ளைகள் எனும் தலைப்பில் சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற பெண்ணொருவர் தனது அப்பா கடந்த 18 வருடங்களாக அம்மா படிக்க வேண்டும் என்பதற்காக சமையல் வேலையை தான் பொறுப்பேற்று செய்து வருகின்றார் என அரங்கத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணைத்தில் வைரலாகியுள்ளது.

நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுவதுடன், ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
அந்தவையில், இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில், சமையல் செய்யும் அப்பாக்கள் vs பிள்ளைகள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது.

இதன் சில முக்கிய காட்சிகளுடன் தற்போது வெளியாகியுள்ள promo காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |