நீயா நானா சூப்பர் அப்பா சீனி ராஜாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? கண்ணீர் விட்டு கதறிய மனைவி
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீனி ராஜா - பாரதி தம்பதி குறித்து தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் ஃபேமஸாக மாறி விட்ட இந்த தம்பதி தற்போது பல்வேறு ஊடங்கங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அப்படி கொடுத்த பேட்டி மூலம் தான் சீனி ராஜாவுக்கு பின்னால் மறைந்துள்ள சோகமும் வெளியாகியுள்ளது.
சிறிய வயதில் படிப்பு வரவில்லை என்கிற காரணத்தால் மளிகை கடையில் வேலைக்கு சென்ற சீனி ராஜா, வேலை பளு காரணமாக சரியான நேரத்தில் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் இருந்ததால் சிறுநீரகம் சுருங்கி போய் விட்டதாக கூறி மருத்துவர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஒரு நிலையில் டயாலிசில் செய்து கொள்ளவேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட சீனி ராஜா கடந்த ஒரு வருடமாக அரசு காப்பீட்டுத்திட்டம் மூலம் டயாலிசிஸ் செய்து வருவதாக கூறியுள்ளார்.
தற்போது மளிகை கடையில் தன்னால் முடிந்த வேலைகளை செய்து வரும் நிலையில், மகளின் மருத்துவர் கனவை நிறைவேற்ற முடிந்தவரை உழைப்பதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தான், தன்னுடைய மனைவி வேலைக்கு செல்ல முடிவு செய்தார். அவர் தன்னை விட அதிகம் சம்பாதிப்பது எனக்கு உதவி செய்யத்தான் என கூறினார்.
இவரை தொடர்ந்து பேசிய அவரது மனைவி பாரதி... நான் வீட்டில் எப்போதுமே அவரை கிண்டல் செய்து கொண்டு தான் இருப்பேன், அதே போல் அங்கு பேசினேன் ஆனால் அனைவராலும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் abcd படித்து கொண்டு இருப்பார் என நான் பேசியது கட் செய்து விடுவார்கள் என நினைத்தேன்.
ஆனால் அது தான் ட்ரோல் செய்யும் அளவுக்கு மாறியது. இந்த நிகழ்ச்சி மூலம் என்னுடைய கணவர் மீது தனக்கு மரியாதை அதிகரித்து விட்டதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.