எல்லா இசையமைப்பாளர்களும் ரொமண்டிக் ஆனவர்கள் தான்! நீயா நானா மேடையில் வெளிவந்த உண்மை
“எல்லா இசையமைப்பாளர்களும் ரொமண்டிக் ஆனவர்கள் தான்” என பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங் முதலில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் " நீயா நானா" . இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பல உண்மையான விடயங்கள் மற்றும் சமுகத்திற்கு தேவையான விடயங்கள் பேசப்படுவதால் கோபிநாத் ஷோ என்றாலே அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும் இரண்டு தரப்புகள் இருப்பார்கள் அவர் அவர் பக்கங்களில் உள்ள சரியான கூற்றை கூறுவார்கள். அதில் எது சமுக பார்வைக்கு ஏற்றதோ அதனை கோபிநாத் குறிப்பாக எடுத்து பேசுவார்.
இது மட்டுமல்ல கோபிநாத் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல ஒரு வானொலி கலைஞர், பேச்சாளர், விவாதிப்பவர், சிறந்த மனிதர் என பல திறமைகள் இவரினுள் இருக்கிறது.
இதனாலே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கலந்துக் கொண்டுள்ளார்.
ரொமன்டிக் அவசியம்
இந்த நிகழ்ச்சியில் பாடகர்களும் கலந்து கொண்டுள்ளார். மேலும் பாடல் வரிகளிலிருக்கும் அர்த்தங்களை சுவாரஸ்யமாக மக்களுக்கு கூறும் வாரமாக இந்த வாரம் அமைந்திருக்கிறது.
அந்த வகையில்,“ செல்லமே என்றேனடி” என்ற பாடல் கார்த்திக் ராஜா தன்னுடைய மனைவிக்காக இசையமைக்கபட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, “ இசையமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு ரொமான்டிக்கானவர்கள் தான் இல்லையென்றால் பாடல்களை சரியாக கம்போஸ் பண்ண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இவரின் பாடல்கள் ஞாபகங்கள் வர வர பக்கத்திலிருக்கும் பாடகிகள் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.