Neeya Naana: கணவனை இழந்த பெண்... கைதூக்கிவிட்ட தோழி! கண்ணீரில் மூழ்கிய அரங்கம்
நீயா நானா நிகழ்ச்சியில் திருமணத்திற்குப் பின்பும் நட்பை தொடரும் பெண் தோழிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் திருமணத்திற்குப் பின்பும் நட்பை தொடரும் பெண் தோழிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் கணவனை இழந்து தோழி திக்கற்று நிற்கும் போது தோழி செய்த உதவிகள் குறித்து அரங்கத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு ஜோடி 32 வருடம் தோழிகள் என்றும் தாங்கள் அணிந்து வந்த நகை, உடை அனைத்தும் ஒற்றுமையாகவே இருக்கும் என்று கூறியுள்ளனர்.
மற்றொருவர் அப்பா இல்லாத தருணத்தில் தனக்கே தெரியாமல் வந்து சீர் கொடுத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இன்னொரு பெண் கணவனை இழந்து தவித்த எனக்கு வாழ்க்கையே தோழியால் தான் வந்ததாக கூறுகின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |