Neeya Naana: கொழுந்தனுக்காக தாலியை கழற்றி அண்ணி செய்த காரியம்... நெகிழ்ச்சியில் அரங்கம்
நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணி மற்றும் கொழுந்தன்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் அண்ணி மற்றும் கொழுந்தன்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கொழுந்தன்களுக்காக அண்ணிகள் அம்மாவாக மாறிய தருணத்தை விளக்கியுள்ளனர்.
அம்மா இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக கைக்குள் வைத்து வளர்ப்பதாக அண்ணி ஒருவர் கூறியுள்ளார். மேலும் மற்றொருவர் கொழுந்தனுக்காக தனது தாலியையே தானமாக கொடுத்துள்ளார். அம்மாவாக மாறி கொழுந்தன் வெளிநாடு செல்வதற்கு தனது தாலியை கழற்றி கொடுத்துள்ளார்.
இதுவரை பேசப்படாத உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளைக் குறித்து தற்போது பேசியுள்ளது பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |