பெற்றோர்களை கிழித்து தொங்க விட்ட பாட்டிமார்கள்.. கொதிப்பில் தம்பதிகள் - கோபிநாத்தின் வாதம் என்ன?
நவீன முறையில் குழந்தை வளர்ப்பு பற்றி தவறான எண்ணங்களை தற்போது இருக்கும் பெற்றோர்கள் வைத்திருக்கிறார் என இந்த வாரம் வாதிடப்படுகிறது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
கொதிப்பில் பாட்டிமார்கள்
இந்த நிலையில், இந்த வாரம் தற்போது இருக்கும் பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளை வளர்க்கிறார் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வாதாடப்படுகின்றது.
அதில் ஒரு பாட்டி, பேரபிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பது முதல் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் கருவுற்றல் முதல் பிள்ளையை பெற்றெடுப்பது வரை நீங்கள் கொடுக்கும் தொல்லை தாங்க முடியவில்லை” என கொதிப்புடன் பேசியுள்ளார்.
இணையத்தை வம்பிழுக்கும் தகப்பன்
“குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது முதல் இணையத்தில் அனைத்திற்கும் பதில் இருக்கின்றது” என ஒரு தகப்பன் கூறினார்.
இதனை கேட்ட கோபிநாத், “ பெற்றோர்களிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனங்களில் இதுவும் ஒன்று.” என வெட்டி பேசியுள்ளார்.
இது போன்ற பல காரசாரமான வாதங்களை கொண்டு இந்த வாரம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வாரம் நவீன பெற்றோர்களுக்கு சிறந்த பாடமாக அமையும் என ரசிகர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்.