Neeya Naana: முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாதிப்பு! தற்போதும் வலியால் அவதிப்படும் நபர்! சர்ச்சையில் கோபிநாத்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார ப்ரொமோ காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீயா நானா
கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் பூர்வ ஜென்ம ஞாபகம் எங்களுக்கு உள்ளது என்று சொல்பவர்களும் அதை மறுப்பவர்களும் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
இளவரசியாக இருந்த பெண்
இதில் பல நபர்கள் பூர்வ ஜென்மம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் ப்ரொமோ காட்சியில் பெண் ஒருவர் பேசுகின்றார். என்னுடைய ஊரில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. அந்த சிவன் கோவிலை பார்த்த போது வித்தியாசமாக உணர்ந்ததுடன், முற்பிறவில் தான் சாந்தகுமாரி என்ற இளவரசியாக இருந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது காட்சியில் நபர் ஒருவர், போன ஜென்மத்தில் ராணுவ வீரராக பணியாற்றிய தனக்கு காலில் குண்டு அடிபட்டது. அந்த வலி இந்த ஜென்மத்திலும் தொடர்வதாக கூறியுள்ளார். ஒருவருக்கு சில காட்சிகளே அவ்வப்போது கண்முன் வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் இவர்களின் விவாதத்திற்கு கோபிநாத் எந்தவொரு வார்த்தையும் விடாமல் இருந்து வரும் நிலையில், என்ன பதில் கொடுக்கப் போகின்றார். கோபிநாத் இப்படி மாறிவிட்டாரே? எதுவும் பேசாமல் இருக்கிறாரே என்று ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |