சின்னத்திரை வில்லிகளை பிரித்தெடுக்கும் சீரியல் வெறியர்கள்.. கலவரத்தில் நீயாநானா!
நீயாநானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சீரியல்களில் வில்லத்தனம் காட்டும் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக அமர்ந்து சீரியல் வெறியர்களின் அவர்கள் தரப்பு நியாயத்தை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
கோபிநாத்தையே அதிர்ச்சியடைய வைத்த பெண்
இந்த நிலையில் இந்த வாரம் சின்னத்திரை வில்லத்தனத்தில் மிரட்டிக் கொண்டிருக்கும் நடிகர்களும், அவர்களை எதிர்க்கும் சின்னத்திரை பிரியர்களும் இரண்டு அணியினராக கலந்து கொண்டனர்.அதில் பேசிய சீரியல் நடிகர்கள், “ எங்களுக்க சீரியலில் வில்லத்தனம் காட்டுவது நிஜ வாழ்க்கையிலும் அப்படியான தாக்கங்களையே காட்டும். சில சமயங்களில் வீட்டிலுள்ளவர்கள் எங்களை சிரிக்குமாறு கேட்பார்கள். அதிலும் சிலர் என்னை அடிப்பதற்காக வருவார்கள்..” என கவலையுடன் பேசியுள்ளனர்.
இப்படி சண்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது குழப்பமடைந்த கோபிநாத், “ நீங்க பேசுவதை கேட்டால் எனக்கே அப்படி தான் தோணுகிறது..” என பதில் கொடுத்துக் கொண்டே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
சீரியலை நிஜ வாழ்க்கையில் நடக்கும் சண்டை போன்று சீரியல் பிரியர்கள் பிரித்தெடுக்கிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |