Neeya Naana: வீடியோ எடுத்து போட்டுருவீங்கனு பயமா இருக்கு? கோபிநாத்திடம் கெஞ்சிய பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுபவர்கள் மற்றும் இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுவது தவறு என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுபவர்கள் மற்றும் இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுவது தவறு என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இரவு நேரத்தில் வெளியே சென்று தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் நபர்கள் அதனை கொண்டாட்டமாக அரங்கத்தில் கூறியுள்ளனர்.
ஆனால் அது தவறு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான் நமது உடல்நலத்தினை தீர்மானிக்கின்றது என்று விவாதிக்கின்றனர் மற்றொரு தரப்பினர்.
எதிர்பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் நான் இப்பொழுது சாப்பிட்டுவிடுவேன் ஆனால் நீங்க வீடியோ எடுத்து போட்டுருவீங்கனு பயமா இருக்குது என்று கூறி அரங்கத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |