மருத்துவமனையில் சாருஹாசன்... நடிகை சுஹாசினி வெளியிட்ட புகைப்படம்
நடிகர் கமல்ஹானின் அண்ணனும், சுஹாசினியின் தந்தையுமான சாருஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் சாருஹாசன்
நடிகர் சாருஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். கமல்ஹாசனின் அண்ணனான இவருக்கும், கமலுக்கும் 23 வயது வித்தியாசம்.
கன்னட படமான தபரன கதே என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சாருஹாசன் வென்றிருக்கிறார்.
தற்போது 93 வயது ஆகும் சாருஹாசன் விஜய் ஸ்ரீ இயக்கிய ஹரா என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறாராம்.
இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவர்களில் ஒருவர் தான் நடிகை சுஹாசினி. இவரும் நடிப்பில் அசத்தி வந்த நிலையில், இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
சாருஹாசன் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் சாருஹாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சுஹாசினி தனது தந்தையை கட்டியணைத்தவாரு உள்ள புகைப்படத்தினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்னுடைய தந்தைக்கு மருத்துவ வெக்கேஷன், மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் மகள்களின் கவனிப்புடன் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
இதனை அவதானித்த பிரபலங்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தும், நலம் விசாரித்தும் வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |