Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் மகள் போல் தங்கையை வளர்த்த அக்கா என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் மகள் போல் தங்கையை வளர்த்த அக்கா என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தங்கையை மகள் போன்று வளர்த்துள்ள அக்காவின் எதிர்பாராப்பு, மனக்கஷ்டம் இவற்றினை அரங்கத்தில் கூறி வருகின்றனர்.
மற்றொரு அக்கா தங்கைகள் பேசுகையில் புடவைக்காக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் தங்கை ஐந்தாயிரத்திற்கு புடவை எடுப்பதாகவும், அக்கா அதற்கு சத்தம் போடுவதாகவும் பேசப்பட்டது.
இதில் அக்கா தனது தங்கையை பார்த்து கொன்றுவேன் என கூறினார். இதனை அவதானித்த கோபிநாத் எனக்கே பயமா இருப்பதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0cff969b-8be0-4468-8b16-421f4aaa9ccd/25-67ac8e1dad626-md.webp)