Neeya Naana: புடவை மடிக்க, சிக்கன் கழுவ தெரியுமா? அரங்கத்தில் தூள் கிளப்பிய இளைஞர்கள்
நீயா நானா நிகழ்ச்சியில் திருமணத்திற்கு அம்மா பிள்ளை வேண்டாம் என மறுக்கும் இளம்பெண்கள்... மறுபக்கம் அம்மாபிள்ளை மகன்கள் தன் அம்மாவோடு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் திருமணத்திற்கு அம்மா பிள்ளை வேண்டாம் என மறுக்கும் இளம்பெண்கள்... மறுபக்கம் அம்மாபிள்ளை மகன்கள் தன் அம்மாவோடு என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

சில இளைஞர்கள் தற்போது அம்மா பிள்ளையாக இருப்பதால் அவர்களை திருமணம் செய்வதற்கு இளம்பெண்கள் அதிகமாகவே யோசிக்கின்றனர். இதற்காக அவர்கள் சொல்லும் காரணம் சற்று கஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அம்மாவிற்கு முதல் இடம் எங்களுக்கு இரண்டாவது இடம் தான் கொடுக்கின்றனர் என்று கூறுகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இளைஞர்களும் தங்களது கருத்துக்களை எடுத்து வைக்கின்றனர்.
இதில் பெண் ஒருவர் இளைஞரை புடவை மடிக்கத் தெரியுமா? என்று கேட்க அரங்கத்தில் இளைஞரும் கெத்தாக புடவையை மடித்து அசத்தியுள்ளார்.
மற்றொரு பெண் சிக்கன் எப்படி கழுவ வேண்டும்? என்று கேட்டார். இதற்கு மற்றொரு இளைஞர் சிக்கனில் ரத்தம் போகும் வரை கழுவ வேண்டும், மஞ்சள் தூள் உப்பு போட்டு கழுவி பின்பு குழம்புக்கு எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |