Neeya Naana: கர்ப்பிணி பெண்ணை அழைத்து வந்த கோபிநாத்... கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்
நீயா நானா நிகழ்ச்சியில் பல ஆண்டுகள் காத்திருந்து குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதிகள், மற்றும் அவர்களின் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் பல ஆண்டுகள் காத்திருந்து குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதிகள், மற்றும் அவர்களின் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பல ஆண்டுகள் காத்திருந்து குழந்தை பெற்றெடுத்த தம்பதிகள் தங்கள் குழந்தை பிறந்ததும், அவர்கள் பெற்ற பரவசத்தை வார்த்தையால் கூற முடியாமல் பெற்றோர்கள் கண்கலங்கியுள்ளனர்.
தவமாய் பெற்ற குழந்தை இன்று திருமணமாகி அவர் ஒரு குழந்தைக்கு தாயாக தயாராகியுள்ளார். இதனை அவதானித்த கோபிநாத் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்து அவரது அம்மாவிடம் செல்கின்றார்.
தனது மகன் நடுவே கம்பி உள்ள சைக்கிள் ஓட்டினால் அடிபட்டுவிடும் என்று பயப்படும் தாய் அவனை வெளியே செல்ல விடாமல் வீட்டுக்குள் விளையாட வைத்துள்ளார். இதனைக் கேட்ட அரங்கமே ஒரு நொடியில் சிரிப்பில் ஆழ்ந்தது.
மற்றொரு அம்மா தனது மகளை வெளியே சென்று விளையாட அனுமதிக்காமல், வெளியே உள்ள குழந்தைகள் கூட தனது வீட்டிற்கு வந்து விளையாடட்டும் என்று கூறுகின்றார். இதற்கு கோபிநாத் உங்க குழந்தையை அனுப்பமாட்டீங்க ஆனால் மற்றவங்க குழந்தைங்க உங்க வீட்டுக்கு வரணுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |