அசலில் பொண்ணு எடுப்பது நகைக்காவா? குழாய் சண்டையாக மாறிய நீயா நானா!
“ அசலில் பொண்ணு எடுப்பது நகைக்காக தான்..” என இரண்டு தரப்பினருக்கு இடையில் சண்டைகள் வெடித்து கொண்டிருக்கின்றது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை எதிர்க்கிறேன் என்றும் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை ஆதரிக்கிறேன் என்றும் இரண்டு தரப்பினர்கள் விவாதிக்கின்றனர்.
வரதட்சணை கொடுமை
அதில், வெளியான ப்ரோமோவில் மாமியார் ஒருவர், “ அசலில் பெண் எடுத்தால் அளவிற்கு அதிகமாக வரதட்சனை கேட்கலாம்.
அதே சொந்தங்களில் பெண் எடுக்கும் பொழுது அவர்கள் தரும் அளவு தான் வாங்க முடியும்.
சொந்தங்களுக்குள் பேரம் பேச முடியாது என கூறுகிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், சொந்தங்கள் வைத்திருக்கும் நகைகளை மற்றவர்களிடம் கூற மாட்டார்கள்.
அத்துடன் அசலில் பொண்ணு எடுப்பது நகைக்காக மட்டுமல்ல ..” என குழாய் சண்டையாக மாறியுள்ளது. இதற்கு நடுவில் சிக்கிய கோபிநாத் யார் பக்கம் நியாயம் கூறுவது என தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்.
இந்த வாரம் நீயா நானா சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனை பார்த்துருங்கீங்களா? ஹாலிவுட் ரேஞ்சுக்கு வெளியான புகைப்படம் இதோ!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |