இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வச்சிக்கிட்டு படுப்பது நல்லதா? நீண்ட கூந்தலுக்காக தெரிஞ்சிக்கோங்க
இரவு நேரங்களில் தலையில் எண்ணெய் வைத்து கொண்டு உறங்குவது நல்லதா என்பதனை இந்த பதிவின் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஆண்களா இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது.
இது தலையில் உள்ள முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது அத்துடன் உடலில் இருக்கும் வெப்பத்தையும் தணிக்கிறது.
பலர் இரவில் முடிக்கு எண்ணெய் தடவிவிட்டு தூங்கச் செல்ல விரும்புகிறார்கள்.
ஏனெனின் இந்த முறையால் தலைமுடி நன்றாக வளரும் என நினைப்பார்கள் இது உண்மையா? என்பதனை பார்க்கலாம்.
எண்ணெய் வைப்பது நல்லதா?
1. தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் நிறைந்துள்ளன. இது தலையில் வைப்பதால் தலையுடன் சேர்த்து சருமமும் பளபளப்பாக இருக்கும்.
2. வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கும். இது ஃப்ரீ ரேடிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
3. எண்ணெய்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகையால் எண்ணெய் தடவும் போது இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
4. உச்சந்தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் இரத்தயோட்டம் சீராக இருக்கும். இதனால் தலைமடி வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |