Neeya Naana: அரங்கத்தில் சர்வராக மாறிய கோபிநாத்! கையில் வைத்திருக்கும் ஐட்டத்தைப் பாருங்க
நீயா நானா நிகழ்ச்சியில் ஹோட்டல் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் ஹோட்டல் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் போட்ட ரீல்ஸ் மூலமாக தானும் ஹோட்டல் தொழிலில் இறங்கியதாகவும், பின்பு நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஒருவர் குமுறுகின்றார்.
மற்றொருவர் ஹோட்டல் தொழில் வைத்து 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |