வாழைப்பழம் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம்?
வாழைப்பழத்தினை கெட்டுப்போகமல் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. செரிமான பிரச்சனைகள், வயிறு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் பல வகையான கனிமங்களும் உள்ளது.
நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தில் அதிகளவு கலோரிகளும் உள்ளது. இவை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.
ஆனால் இந்த வாழைப்பழங்கள் சீக்கிரமாக கெட்டுப்போகும் தன்மை கொண்டது. இதனை கெட்டுப்போகாமல் சில நாட்கள் வைத்து சாப்பிடுவது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்?
வாழைப்பழத்தில் உள்ள தண்டை மூடி வைப்பது சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றது. ஏனெனில் எத்திலீன் வாயு வெளியீட்டை தடுக்க முடியும். அதாவது வாழைப்பழத்தை பழுப்பு நிறத்தில் எளிதில் மாறவிடாமல், மஞ்சள் நிறத்திலேயே வைத்திருக்க உதவும்.
வாழைப்பழத்தினை வாங்கி வந்ததும் கீழே வைத்தால் எளிதில் கெட்டுப்போய்விடும். ஆதலால் ஏதேனும் கொடியில் தொங்கவிடுவது நல்லது. இவ்வாறு செய்தால் காற்று பழத்தை சுற்றி அனுமதிக்கப்பட்டு, பழம் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
வாழைப்பழத்தின் புத்துணர்ச்சியை நீடிக்க குளிர்சாதன பெட்டியில் வைப்பது மற்றொரு பயனுள்ள முறையாகும். குளிர்சாதன பெட்டியில் அவற்றை சேமித்து வைப்பதன் மூலம், குளிர்ந்த வெப்பநிலை, வாழைப்பழம் பழுக்க வைப்பதை கணிசமாகக் குறைக்கிறது. இதனால் இவை பழுப்பு நிறமாவது தாமதம் ஆகிறது.
ஆப்பிள் அவகேடா போன்ற பழங்களுடன் வாழைப்பழத்தினை வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் பிரித்து வைத்தால் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும்.
அதிகமான பழங்கள் இருந்தால் அதனை இரண்டு பிரிவாக பிரித்து கொடியில் தொங்கவிடவும். இதனால் பழம் சீக்கிரம் பழுப்பு நிறத்தில் மாறினாலும், மற்ற பழங்களின் பழத்தின் நிறத்தை மாற்றுவதை தவிர்க்கலாம்.
image: istock
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |