Neeya Naana: பெண் கூறிய ஒற்றை சம்பவம்! அல்டிமேட்டான கோபிநாத்தின் ஃப்ளாஸ்பேக்
நீயா நானா நிகழ்ச்சியில் பத்து வருடம் காதலித்து திருமணம் செய்தவர்கள்... எப்படி என ஆச்சரியப்படும் 2K பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு பத்து வருடம் காதலித்து திருமணம் செய்தவர்கள்... எப்படி என ஆச்சரியப்படும் 2K பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு ஜோடி தான் காதலிக்கும் போது 18முறை வீட்டில் அடி வாங்கியதாகவும், தற்போது இவரைப் போன்று மாப்பிள்ளையே கிடையாது என்று கூறுவதாக கூறியுள்ளார். இதில் ஆதங்கப்பட்ட கோபிநாத் தனத ஃப்ளாஸ்பேக் சென்று உண்மையை கூறியுள்ளார்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் பெண்ணின் தந்தை மண்ணென்ணெய் ஊற்றி உயிரிழந்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் கண்டுகொள்ளாத அப்பெண் தான் விரும்பியவரையே திருமணம் செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |