Neeya Naana: அரங்கத்தில் கோபிநாத்தையே கண்கலங்க வைத்த சிறுவன்! நடந்த சம்பவம் என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் படித்துக் கொண்டே வேலைக்கு செல்லும் சிலரின் சம்பவங்கள் தொகுப்பாளரையே கண்கலங்க வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு படித்துக் கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் படித்துக் கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் தாங்கள் படும் வேதனையை கூறி அரங்கத்தை கண்கலங்க வைத்துள்ளனர்.
பெண் ஒருவர் தான் 8ம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்துவிட்ட நிலையில், உறவினர்கள் படிக்க வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஆனால் தனது விடாமுயற்சியினால் இன்று அரசு ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறி நெகிழ வைத்துள்ளார்.
பள்ளி செல்லும் சிறுவன் ஒருவன் மாலையில் பழக்கடையில் வேலைக்கு செல்லும் நிலையில், அங்கு மூட்டை தூக்கி படும் அவஸ்தையும் விளக்கியுள்ளார். குறித்த சிறுவனின் வேலை கஷ்டத்தினை கோபிநாத் அரங்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவன் தனது தாத்தாவின் வளர்ப்பில் வளர்ந்து வரும் நிலையில், தாத்தாவும் இல்லை என்றால் தான் என்ன செய்வது என்று அரங்கத்தில் வடித்த கண்ணீர் ஒட்டுமொத்த நபரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கும் மாணவன் ஒருவன் தான் வாழைத்தாறு வெட்டியதை ஒன்றல்ல, மூன்றை தலையில் வைத்து சுமக்கும் கஷ்டத்தை கடந்து வருகின்றார். இதுவே நகரத்தில் இருக்கும் ஒரு இளைஞரின் தலையில் வாழைத்தாறு வைத்த போது அவரால் அதனை தூக்கமுடியவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |