கணவரை பிரிந்த பெண்... 10 ஆண்டுக்கு பின்பு சேர நினைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! சோகத்தில் நீயா நானா
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மணமுறிவு செய்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு மணமுறிவு செய்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் ஒருவர் தனது வாழ்க்கையினை தனது குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு தொலைத்துவிட்டு தற்போது கடும் மனவேதனையில் உள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பின்பு தனது கணவருடன் சேர நினைத்த அவருக்கு, கணவரின் இரண்டாவது திருமணம் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த பெண்ணின் சம்பவம் பார்வையாளர்களுக்கும் ஒருவித வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |