Neeya Naana: டயட் பிரியர்களை கிழித்து தொங்க விட்ட நீயா நானா.. இதில் எது உண்மை?
டயட் பிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் காணொளியை பார்த்து கடைபிடிக்கும் டயட் கடைபிடிப்பவர்களுக்கு நீயா நானாவில் தரமான பதில் கொடுக்கப்பட்டுள்ளது
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
இந்த டயட் சரியா?
இந்த நிலையில் இந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வரும் டயட் பிளான்களை கடைபிடிக்கும் பயனர்கள், அதனை மறுக்கும் நிபுணர்கள் என இரு தரப்பினர் வாதம் செய்தனர்.
அதில், பெண் நாங்கள் முன்னர் தவறான உணவு பழக்கங்கள் பின்பற்றினோம். தற்போது சமூக வலைத்தளங்களை பார்த்து ஆரோக்கியமான உணவு முறைகளை மாற்றிக் கொண்டோம் என கூறிய பின்னர் அவர் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவுகளை பட்டியல் படுத்துகிறார்.
இதனை கேட்ட நிபுணர்கள், நீங்கள் பின்பற்றும் உணவு முறை தவறான என சிவப்பு நிற கொடியை காட்டுகிறார்கள். அத்துடன் சில மருத்துவர்கள் தவறான டயட் பிளான்களினால் உடலில் ஏற்படும் ஆபத்தான அறிகுறிகள் குறித்து விளக்கமாக கூறுகிறார்கள்.
அதில் பார்க்கும் பொழுது உண்மையில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என சந்தேகம் எழுகிறது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |