Neeya Naana: உங்க Friend கிட்ட பேசுற மாதிரி எங்ககிட்ட பேசுங்க... அரங்கத்தில் மகள்களின் குமுறல்
நீயா நானா நிகழ்ச்சியில் கண்டிப்பான அப்பாக்கள் மற்றும் மகள்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் கண்டிப்பான அப்பாக்கள் மற்றும் மகள்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மகள்கள் அப்பாவிடம் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டுள்ளனர்.
அதாவது அப்பா தன்னிடம் சகஜமாக பேசுவதில்லை என்று குமுறியுள்ளனர். உங்கள் தோழனிடம் பேசுவது போன்று எங்களிடம் பேசுங்கள் என்று வாதத்தை முன் வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |