Neeya Naana: என்னோட விவாதம் பண்ணனும்னா பண்ணுங்க... அரங்கத்தில் கொந்தளித்த பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தை பிறந்த பின்பு வாழ்க்கை டென்ஷன் ஆகிடுச்சி என்று கூறுபவர்கள்... இன்றைய தாய்மார்கள் சாதாரண விஷயத்தை பெரிதாக்குகின்றனர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு குழந்தை பிறந்த பின்பு வாழ்க்கை டென்ஷன் ஆகிடுச்சி என்று கூறுபவர்கள்... இன்றைய தாய்மார்கள் சாதாரண விஷயத்தை பெரிதாக்குகின்றனர் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் இன்றைய தாய்மார்கள் குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதை குறித்து விவாதிக்கப்படுகின்றது.
மேலும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எந்தவொரு சமாதானமும் ஆகாத பெண் ஒருவர் அரங்கத்தில் தனது கோபத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |