whatsapp status பாத்தே கதறிய அண்ணன்! ஏன்னு தெரிஞ்சு கலங்கிய தங்கை
சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில், "கிராமத்து அண்ணன் - தங்கை மற்றும் நகர்ப்புற அண்ணன் - தங்கை" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றிருந்தது.
இதில், இரு தரப்பினரும் தங்கள் சார்பில் பல கருத்துக்களையும் முன் வைத்திருந்தனர்.
அப்போது அண்ணனுக்காக தங்கை அழுவதும், தங்கைக்காக அண்ணன் அழுவதும் கிராமத்தில் தான் நடக்கும் என ஒருவர் குறிப்பிடுகிறார்.
இது பற்றி நகர்ப்புற அணியில் இருந்து ஒருவர் பதில் சொல்ல, இதனைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள ஒரு அண்ணன் - தங்கை அழுகை பற்றி பேசிய விஷயங்கள் தான், இதன் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
அப்போது பேசும் கிராமப்புற அண்ணன் ஒருவர், "இப்போது நான் படிக்கவோ அல்லது வேறு காரணத்திற்காக அவரை பிரிந்து சென்று விட்டால், அது பற்றி எனது தங்கை வாயாற சொல்லாமல் ஸ்டேட்டஸில் வைப்பார்.
அவர் வைக்கும் அந்த ஸ்டேட்டஸ் பார்த்து நான் அழுதுள்ளேன்" என தெரிவிக்கிறார். இதனைக் கேட்ட அவரது தங்கை, "எனது ஸ்டேட்டஸை பார்த்து விட்டு மிகவும் ஜாலியாக தான் ரிப்ளே செய்வார். அவர் என்னை அரிசிமூட்டை என்றே அழைப்பார்.
ஆனால், எனக்காக அழுதிருக்கிறான் என்றே எனக்கு தெரியாது.
எனக்காக அவன் அழுகிறான் என்பதே இப்போது தான் தெரியும்" என கூறிய படியே கண் கலங்குகிறார். மிகவும் ஜாலியாகவே இருக்கும் அண்ணன், தனக்காக அழுதுள்ளான் என்ற விஷயம் தொடர்பான வீடியோ, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.