அனிதா வாழ்வில் இவ்வளவு பிரச்சினையா.... கண்கலங்கிய கணவர்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் அனிதா சம்பத் அவர் வாழ்வில் பட்ட கஷ்டங்களை கூறும் போது அவரின் கணவர் கண்கலங்கியுள்ளார்.
இது குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
அனிதா சம்பத் சின்னத்திரை வட்டாரத்தில் சக்சஸ்ஃபுல் பெண்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அனிதா, நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கியர்.
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை பிரபலம் ஆனார். அதன் பின்பு வெள்ளித்திரையில் முகம் காட்டியவர் இன்று அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சொந்த வீட்டு கட்டி குடி புகுந்த அனிதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. இந்த நிலையில் சொந்த வீடு கட்டனும் என்ற ஆசை எவ்வளவு நாட்களாக இருக்கின்றது என்று தொகுப்பாளர் கோபிநாத் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அனிதா கூறிய பதில் அறங்கை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.